விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : ஆக 14, 2021
Share
கண்டமங்கலம் : கண்டமங்கலம் வட்டார தென்பெண்ணை ஆறு கீழ் உபவடி நிலப்பகுதி கிராம விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:கண்டமங்கலம் வட்டார தோட்டக்கலைத் துறையின் கீழ் 2021-2022ம் ஆண்டு தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மைத் திட்டம் தென்பெண்ணை ஆறு கீழ் உபவடி நிலப்பகுதி

கண்டமங்கலம் : கண்டமங்கலம் வட்டார தென்பெண்ணை ஆறு கீழ் உபவடி நிலப்பகுதி கிராம விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:கண்டமங்கலம் வட்டார தோட்டக்கலைத் துறையின் கீழ் 2021-2022ம் ஆண்டு தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மைத் திட்டம் தென்பெண்ணை ஆறு கீழ் உபவடி நிலப்பகுதி கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் தோட்டப்பயிர் பரப்பு விரிவாக்கம் மற்றும் சொட்டு நீர் பாசன கட்டமைப்பு இனங்களுக்கு பொருள் இலக்கு 60 எக்டேர் மற்றும் நிதி இலக்கு 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பரப்பு விரிவாக்க இனத்தில் மானியம் மூலம் கத்திரி நாற்று 4 எக்டேர், மிளகாய் நாற்று 10, வெண்டை விதை 7, மரவள்ளி 20, கொய்யா நாற்று 4, வாழை 5 எக்டேர் என இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொட்டு நீர் பாசன கட்டமைப்புகள் விவசாயிகளின் வயல்களில் மானியம் மூலம் அமைப்பதற்கு நிதி இலக்கு 9 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கண்டமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X