பொது செய்தி

தமிழ்நாடு

வட்ட மேசை மாநாடு ஏன், எதற்கு, எப்படி?

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பிரிட்டிஷ் இந்தியாவில், அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த, பிரிட்டிஷ் அரசால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டது. 1929ல் வெளியான சைமன் குழுவின் அறிக்கை பல தரப்பட்ட இந்தியர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, அடுத்த கட்ட அரசியல் சீர்திருத்தங்களைத் தீர்மானிக்க வேண்டும் என,

பிரிட்டிஷ் இந்தியாவில், அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த, பிரிட்டிஷ் அரசால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டது. 1929ல் வெளியான சைமன் குழுவின் அறிக்கை பல தரப்பட்ட இந்தியர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, அடுத்த கட்ட அரசியல் சீர்திருத்தங்களைத் தீர்மானிக்க வேண்டும் என, பரிந்துரைத்து இருந்தது.1930ல் சட்ட மறுப்பு இயக்கத்தால், இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல பிரிட்டிஷ் தலைவர்கள் இந்தியாவுக்கு, மேலாட்சி அங்கீகாரம் வழங்கும் காலம் வந்து விட்டதாக கருதினர். எனவே, சைமன் குழுவின் பரிந்துரையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க வட்டமேசை மாநாடுகள் கூட்டப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X