கிரைம் செய்திகள்...

Added : ஆக 14, 2021
Share
Advertisement
6 பேர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: மாதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆபேல். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி ஆபேல் மற்றும் அவரது உறவினர்கள் சிவா மற்றும் அவரது மனைவியை தாக்கினர். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார், ஆபேல், கணேசன், மகேஷ், வெங்கடேசன், டோனிபாஸ்கர், மோட்சராணி ஆகிய 6 பேர் மீது வழக்கு

6 பேர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லுார்: மாதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆபேல். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி ஆபேல் மற்றும் அவரது உறவினர்கள் சிவா மற்றும் அவரது மனைவியை தாக்கினர். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார், ஆபேல், கணேசன், மகேஷ், வெங்கடேசன், டோனிபாஸ்கர், மோட்சராணி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாராயம் விற்ற இருவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மழவராயனுார் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த பாபு, 42; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் டி.புதுப்பாளையத்தில் சாராயம் விற்ற தொப்பையன், 82; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆசிரியர் வீட்டில் திருட முயற்சி

விழுப்புரம்: வழுதரெட்டியைச் சேர்ந்தவர் கிளாடு வெஞ்சலின், 37; அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர், கடந்த 11ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான அணையேரிக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் எதுவும் திருடு போகாதது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண் தற்கொலை

திருக்கோவிலுார்: சந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி சுகந்தா, 58; இவர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 10ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டார். உடன், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகந்தா, நேற்று இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மணல் கடத்தியவர் கைது

கள்ளக்குறிச்சி: மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், நேற்று காலை விளந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பைக்கில் 4 சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 35; என்பவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

மனைவியை தாக்கிய கணவர் கைது

கள்ளக்குறிச்சி: நாகலுாரைச் சேர்ந்தவர் சேகர், 41; இவரது மனைவி சங்கீதா, 35; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா கணவரிடம் இருந்து பிரிந்து நெய்வேலி அடுத்த திடீர்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி குலதெய்வ வழிபாட்டிற்காக அவரது பிள்ளைகள் மற்றும் தோழி சவுந்தர்யா ஆகியோருடன் நாகலுார் வந்தார். அங்கு சேகர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த இருவர் சங்கீதாவைத் தாக்கினர். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, சேகரை கைது செய்தனர்.

லாரி விபத்து: போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை: விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 54; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, விருதாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி லோடு இல்லாத காலி டேங்க்கர் லாரியை ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 12:30 மணியளவில் உளுந்துார்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியின் முன்பக்க அச்சு உடைந்து சேதமடைந்தது. கணேசன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X