பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட மைதானம் கொடுங்க...

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோவை:தமிழகத்தின், 2021-22ம் ஆண்டுக்கான, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில், விளையாட்டு மேம்பாட்டிற்கு, ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விளையாட்டு வசதிகள் இல்லாத, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும் என்றார்.இது குறித்து, கோவையின் பல்வேறு
 விளையாட மைதானம் கொடுங்க...

கோவை:தமிழகத்தின், 2021-22ம் ஆண்டுக்கான, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில், விளையாட்டு மேம்பாட்டிற்கு, ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விளையாட்டு வசதிகள் இல்லாத, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும் என்றார்.இது குறித்து, கோவையின் பல்வேறு விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் கூறுவது என்ன?'மைதானம் வேண்டும்'கோவையில் பல விளையாட்டு அமைப்புகளுக்கு, மைதானங்கள் கிடையாது. புதியதாக உள்விளையாட்டு மைதானம் அமைத்தால், டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்குகுறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்க வேண்டும். மைதானம் இருந்தால், சர்வதேச வீரர்களை உருவாக்கும் திறமை, எங்களிடம் உள்ளது. இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.- சேகர் ராம், தலைவர், மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன்.'குழு அமைக்க வேண்டும்'ஒரு தொகுதி விளையாட்டு துறைக்கு வரவேற்கத்தக்கது. தமிழக அரசிற்கு நன்றி. திட்டங்கள் அமைக்க சட்டசபை தொகுதியில் உள்ள விளையாட்டு வல்லுநர்கள் அழைப்பு, ஒரு குழு அமைத்து ஆலோசனை கேட்டு, அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், விளையாட்டு மேம்பட உதவியாகவும் இருக்கும்.- முத்துகிருஷ்ணன் செயலாளர், மாவட்ட எறிபந்து கழகம்.'சாதிக்க வசதி வேண்டும்'கோவை மாவட்டத்தில் தடகளம், ஜிம்னாஸ்டிக், பாக்சிங் போன்ற விளையாட்டிற்கு மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. உள்விளையாட்டு அரங்கம் இல்லாதது, நீண்ட நாள் கோரிக்கை. டேக்வாண்டோ விளையாட்டுக்கு, தேவையான அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் கூட கிடையாது. மாநில விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றால் அரசு சார்பில், பெரிய ஊக்கம் கிடைப்பதில்லை. வசதியானவர்களால் மட்டுமே, விளையாட்டில் சாதிக்க முடிகிறது.- சிஜூகுமார் செயலாளர், கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ அசோசியேஷன்.'நிதி பத்தாது'கோவை மாவட்டத்தில் விளையாட்டு துறைக்கு, எஸ்.டி.ஏ.டி., சார்பில் முறையான பயிற்சியாளர்கள் இல்லை. பயிற்சியாளர்கள் இல்லாததால், வீரர்களை உருவாக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகையை வைத்து, ஒன்றும் செய்ய முடியாது. நிதியை உயர்த்தி, முறையான பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.- செந்தில் ராஜ்குமார்செயலாளர், மாவட்ட ஹாக்கி அசோசியேஷன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X