தமிழ்நாடு

குப்பைகளை சங்கராபரணி ஆற்றில் கொட்டுவதால் சீர்கேடு! அமைச்சர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை சங்கராபரணி ஆற்றில் கொட்டி, ஆற்றினை பாழ்படுத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த பட்டியலில் நகராட்சியாக அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக செஞ்சி பேரூராட்சி உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
குப்பைகளை சங்கராபரணி ஆற்றில் கொட்டுவதால் சீர்கேடு! அமைச்சர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செஞ்சி : செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை சங்கராபரணி ஆற்றில் கொட்டி, ஆற்றினை பாழ்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த பட்டியலில் நகராட்சியாக அறிவிப்பு வெளியாவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக செஞ்சி பேரூராட்சி உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. செஞ்சியில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டன் குப்பைகள்சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளைக் கொட்ட தனி இடம் இல்லை. இதனால், ஆற்றிலும், ஏரியிலும், சாலை ஓரங்களிலும் கொட்டினர்.

இதற்கு பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால் 15 ஆண்டுகளுக்கு முன் நாட்டேரியில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.இங்கு சில ஆண்டுகள் குப்பைகளைக் கொட்டி உரம் தயாரித்தனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளானதால் அங்கும் குப்பைகளைக் கொட்ட விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அடுத்ததாக சிங்கவரம் சாலை, சேத்துப்பட்டு சாலை என சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி எரித்தனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இந்த இடத்திலும் எதிர்ப்பு கிளம்பியதால் குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் 3,000 மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளியின் அருகே கொட்டினர்.இதற்கு பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எல்லா இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு ஆண்டாக திண்டிவனம் சாலையில் உள்ள பழைய பாலத்தின் மீதிருந்து சங்கராபரணி ஆற்றில் கொட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்குத் தீர்வு காண செஞ்சிக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை தேர்வு செய்யும்படி வருவாய்த் துறையினருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால், இப்போது வரை இடம் தேர்வு செய்யப்படவில்லை.அமைச்சர் மஸ்தான் தினமும் செஞ்சி பயணியர் விடுதிக்கு வந்து செல்கிறார். தற்போது இந்த அலுவலகத்திற்கு வெளியேதான் ஆற்றில் குப்பைகளை கொட்டும் படலம் அரங்கேறி வருகிறது.ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர். எனவே செஞ்சி பேரூராட்சியில் பல ஆண்டு பிரச்னையாக உள்ள குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடம் தேர்வு செய்ய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X