பொது செய்தி

தமிழ்நாடு

தனி பட்டா தொடர்பான உத்தரவு மூதாட்டியிடம் டி.ஆர்.ஓ., விசாரணை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தனி பட்டா தொடர்பான ஐகோர்ட் உத்தரவு குறித்து மூதாட்டியிடம் டி.ஆர்.ஓ., விசாரணை செய்தார்.மேல்மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், 85; ஆஞ்சநேயர் சித்தர் யதிதந்தா பீடத்தை நிர்வகித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 10.75 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை அளந்து தனி பட்டா வழங்குமாறு கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி செஞ்சி தாலுகா அலுவலகத்தில்

விழுப்புரம் : தனி பட்டா தொடர்பான ஐகோர்ட் உத்தரவு குறித்து மூதாட்டியிடம் டி.ஆர்.ஓ., விசாரணை செய்தார்.

மேல்மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், 85; ஆஞ்சநேயர் சித்தர் யதிதந்தா பீடத்தை நிர்வகித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 10.75 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலத்தை அளந்து தனி பட்டா வழங்குமாறு கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி செஞ்சி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், 2013 மார்ச் 25ம் தேதி திண்டிவனம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போதும், நடவடிக்கை எடுக்காததால், செஞ்சி கோர்ட்டில் உள்ள மாவட்ட உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கில் பட்டா வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் 2019ம் ஆண்டு மே 23ம் தேதி உத்தரவிட்டது.இது தொடர்பாக நேற்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முனியம்மாளிடம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் விசாரணை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X