50 ஆயிரத்தை நெருங்கும் பசுமை பயணம்: வனத்துக்குள் திருப்பூர் திட்டம் விறுவிறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

50 ஆயிரத்தை நெருங்கும் பசுமை பயணம்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் 'விறுவிறு'

Added : ஆக 14, 2021
Share
திருப்பூர்:தென்மேற்கு பருவமழை துவங்கியதால், தரிசு நிலங்களில் பசுமையை விதைக்க விவசாயிகள் தயாராகிவிட்டனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேட்டறிந்த விவசாயிகள், தங்களது மானாவாரி நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய முன்வந்துள்ளனர்.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், 50 ஆயிரமாவது மரக்கன்று நடவுப்பணி நெருங்கிக்கொண்டிருக்கிறது.
 50 ஆயிரத்தை நெருங்கும் பசுமை பயணம்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் 'விறுவிறு'

திருப்பூர்:தென்மேற்கு பருவமழை துவங்கியதால், தரிசு நிலங்களில் பசுமையை விதைக்க விவசாயிகள் தயாராகிவிட்டனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேட்டறிந்த விவசாயிகள், தங்களது மானாவாரி நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய முன்வந்துள்ளனர்.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், 50 ஆயிரமாவது மரக்கன்று நடவுப்பணி நெருங்கிக்கொண்டிருக்கிறது. கருவலுார் கிராமம் மருதுாரில், மயில்சாமி, நிர்மலாவுக்கு சொந்தமான, டி.எஸ்.பி., தோட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் வடக்கு லயன்ஸ் கிளப் தலைவர் பிரகாஷ், பொருளாளர் கோபிநாத், முன்னாள் தலைவர் பொன்னுசாமி, செந்தில்நாதன், 'வனத்துக்குள் திருப்பூர்' சீதாராமன் உள்ளிட்டோர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். அப்பகுதியில், 585 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 900470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X