இந்தியா

அரவிந்தர் 149வது பிறந்த நாள் விழா..

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஆரோவில் : அரவிந்தரின் 149வது பிறந்த நாள் தினத்தையொட்டி ஆரோவில் ஆம்பி தியேட்டரில் 'டான் பயர்' மற்றும் தியானம் நடக்கிறது.அரவிந்தர் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாள், புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சர்வதேச நகரில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு 149வது பிறந்த நாள் தினத்தையொட்டி நாளை 15ம் தேதி

ஆரோவில் : அரவிந்தரின் 149வது பிறந்த நாள் தினத்தையொட்டி ஆரோவில் ஆம்பி தியேட்டரில் 'டான் பயர்' மற்றும் தியானம் நடக்கிறது.

அரவிந்தர் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாள், புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சர்வதேச நகரில் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு 149வது பிறந்த நாள் தினத்தையொட்டி நாளை 15ம் தேதி அதிகாலை 4:45 முதல் 6:30 மணி வரை ஆரோவில் மாத்ரி மந்திர் அருகில் உள்ள ஆம்பி தியேட்டரில் 'டான் பயர்' மற்றும் தியான நிகழ்ச்சி நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆரோவில் வாசிகள் மட்டுமே பங்கேற்க முடியும். வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை.இதே போன்று புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் அறை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அரவிந்தரின் சமாதியை மட்டும் தரிசனம் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X