பஸ் உரிமையாளர் மர்ம சாவு; கடலூர் போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் உரிமையாளர் மர்ம சாவு; கடலூர் போலீஸ் விசாரணை

Added : ஆக 14, 2021
Share
கடலுார் : கடலுார் கடற்கரையில் மர்மமான முறையில் பஸ் உரிமையாளர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார், புதுப்பாளையம் ,சீத்தாரம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 56; பஸ் உரிமையாளர். இவர், தினமும் சில்வர் பீச்சில் சோனாங்குப்பம் செல்லும் வழியாக நடைபயிற்சி செய்வார். நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.சந்தேகமடைந்த அவரது மகன்

கடலுார் : கடலுார் கடற்கரையில் மர்மமான முறையில் பஸ் உரிமையாளர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார், புதுப்பாளையம் ,சீத்தாரம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 56; பஸ் உரிமையாளர். இவர், தினமும் சில்வர் பீச்சில் சோனாங்குப்பம் செல்லும் வழியாக நடைபயிற்சி செய்வார். நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.சந்தேகமடைந்த அவரது மகன் கவுஷிக்ராம், தந்தையை தேடி கடற்கரைக்கு சென்றார். அங்கு, தந்தை எடுத்து வந்த மொபட் ஹைமாஸ் விளக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

தந்தை நடைபயிற்சி மேற்கொள்ளும் சோனாங்குப்பம் கடற்கரை சாலையில் தேடிச் சென்றார். அப்போது, சிறிது துாரத்தில் சவுக்கு தோப்பு அருகே கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கி இருந்தது. அதிர்ச்சியடைந்த கவுஷிக்ராம், கடலுார் துறைமுக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விசாரித்தனர்.

கொரோனா ஊரடங்கில் இருந்து 2 ஆண்டாக தொழில் பாதிப்பால் கடன் பிரச்னை இருந்துள்ளது. அதனால் மனமுடைந்த அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.கவுஷிக்ராம் கொடுத்த புகாரில், துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். கடலுாரில் பிரபல பஸ் உரிமையாளர் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X