சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து கொள்ளை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : ஆலத்துாரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை, பணம் உட்பட 11.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் தனசேகரன், 65; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது விளை நிலத்தை புத்தந்துாரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம்

கள்ளக்குறிச்சி : ஆலத்துாரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை, பணம் உட்பட 11.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் காட்டுகொட்டகையைச் சேர்ந்தவர் தனசேகரன், 65; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது விளை நிலத்தை புத்தந்துாரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.தனசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர், தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு சிகிச்சைக்காக கடந்த வாரம் கோயம்புத்துார் சென்றார்.இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை 8:00 மணியளவில், வழக்கம் போல் நிலத்திற்கு வந்த ஜெய்சங்கர், வீட்டு கதவின் பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்தார்.

உடனே தனசேகரனை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். தனசேகரன் மகன் அருள்செல்வன், 29; வீட்டிற்கு வந்து பார்த்தனர். பீரோ உடைக்கப்பட்டு வளையல், தோடு, மோதிரம் உட்பட 30 சவரன் நகைகள், தட்டு, டம்ளர், விளக்கு உள்ளிட்ட ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 5 லட்சம் ரூபாய் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் தடயங்களை சேகரித்தனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு 11 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X