ஏலச்சீட்டு மோசடியில் கைதானவரிடம் ரூ. 3 லட்சம் நகை, பணம் பறிமுதல் | Dinamalar

இந்தியா

ஏலச்சீட்டு மோசடியில் கைதானவரிடம் ரூ. 3 லட்சம் நகை, பணம் பறிமுதல்

Added : ஆக 14, 2021
Share
புதுச்சேரி : ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதானவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மன்னார்குடியைச் சேர்ந்த பாஸ்கர், 54; புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா என்பவரை 1990ல் திருமணம் செய்து கொண்டு, ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இத்தம்பதி, பூமியான்பேட்டை பகுதியில் அரசில் பதிவு

புதுச்சேரி : ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதானவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மன்னார்குடியைச் சேர்ந்த பாஸ்கர், 54; புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்த மஞ்சுளா என்பவரை 1990ல் திருமணம் செய்து கொண்டு, ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இத்தம்பதி, பூமியான்பேட்டை பகுதியில் அரசில் பதிவு செய்யாமல் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தினர்.

பூமியான்பேட்டையைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பணம் கட்டி வந்தனர். கடந்த 2020 ஜனவரி மாதம், பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா இருவரும், சீட்டு பணத்துடன் மாயமாகினர். சீட்டு பணம் கட்டி ஏமாந்த பூமியான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி வசந்தி, 43; உள்ளிட்ட 50 பேர், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, பாஸ்கர், மஞ்சுளா தம்பதி, ரூ. 1.45 கோடி வரை சீட்டு பணம் ஏமாற்றியது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த பாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 8ம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த 11ம் தேதி பாஸ்கரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். மோசடி செய்து ஏமாற்றிய பணத்தில் பாஸ்கர் வாங்கி வைத்திருந்த 1.5 கிலோ வெள்ளி நகை, பொருட்கள், 6 சவரன் நகை, ரூ. 5,000 பணம், சிட்டு நடத்தி வந்த கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணை முடிந்து பாஸ்கர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பாஸ்கர் மனைவி மஞ்சுளாவை கைது செய்யவும், சொத்துக்களை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X