அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் சப்ளை மந்தம்: பா.ஜ.,வினர் மறியல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், பாளையக்காடு, கருமாரம்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த நேரம் மற்றும் குறைந்த அளவே குடிநீர் வழங்கப்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, பா.ஜ., மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் ஊத்துக்குளி ரோடு
 குடிநீர் சப்ளை மந்தம்:  பா.ஜ.,வினர் மறியல்

திருப்பூர்:திருப்பூர், பாளையக்காடு, கருமாரம்பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை.மிக குறைந்த நேரம் மற்றும் குறைந்த அளவே குடிநீர் வழங்கப்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, பா.ஜ., மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடுபஸ் ஸ்டாப்பில் நேற்று காலை மறியல் நடந்தது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வடக்கு போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்தனர்.மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். அதில், முறையாக குடிநீர் சப்ளை, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X