பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்! தமிழக பட்ஜெட்; பின்னலாடை துறை வரவேற்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழக தொழில் வளர்ச்சிக்கு, நகர வளர்ச்சிக்கு உகந்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக, திருப்பூர் பின்னலாடை துறையினர் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.'சைமா' தலைவர் ஈஸ்வரன்:'டைடல் பார்க், பெருநகர் வளர்ச்சி கழகம் அமைப்பது, பனியன் நகரான திருப்பூரின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். கோவை, சென்னையில், தொழிலாளருக்கு மலிவான வாடகை குடியிருப்பு வசதி
திருப்பூரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்! தமிழக பட்ஜெட்; பின்னலாடை துறை வரவேற்பு

திருப்பூர்:தமிழக தொழில் வளர்ச்சிக்கு, நகர வளர்ச்சிக்கு உகந்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக, திருப்பூர் பின்னலாடை துறையினர் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.'சைமா' தலைவர் ஈஸ்வரன்:'டைடல் பார்க், பெருநகர் வளர்ச்சி கழகம் அமைப்பது, பனியன் நகரான திருப்பூரின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். கோவை, சென்னையில், தொழிலாளருக்கு மலிவான வாடகை குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.புலம் பெயர்ந்த தொழிலாளர் அதிகம் உள்ளதால், திருப்பூரிலும் மலிவு வாடகை குடியிருப்புகளை கட்டவேண்டும். திறன் மேம்பாட்டுக்கு, பயிற்சி மையம் அமைத்து, புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், தொழில் துறை வளர்ச்சி பெறும்.லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம்:குறு, சிறு நிறுவனங்களின் சீரமைப்புக்காக சுந்தரதேவன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டி மூலம், தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.திருப்பூரில் உள்ள பொதுசுத்திகரிப்பு மையங்களை மேம்படுத்துவது உட்பட பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. சென்னை, கோவையை போன்று, திருப்பூரிலும், தொழிலாளர் பயன்பாட்டுக்காக, மலிவு விலை குடியிருப்புகள் கட்ட வேண்டும்.தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்அண்ணாதுரை:கொரோனாவால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில், நலிவடைந்த நிறுவனங்களின் மறு கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் உத்தரவாதம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.தாய்கோ வங்கி மூலம், புதிய கடன் வழங்கப்படுவது, நிறுவனங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்.'டீமா' தலைவர் முத்துரத்தினம்:பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பதன்மூலம், தமிழக தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். துணி நுால் துறைக்கு தனி இயக்குனரகம் அமைப்பது வரவேற்கத்தக்கது. இந்திய பருத்தி கழகம் போன்று, தமிழக அரசு, பருத்தி கழகத்தை உருவாக்கவேண்டும்.வீட்டு வசதி துறைக்கு 3,954 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், திருப்பூரில், தொழிலாளர்களுக்கு வீடு கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X