பொது செய்தி

தமிழ்நாடு

அரசு வக்கீல்கள், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூடியது!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, அரசுத்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சரவண மூர்த்தி, ஆர்.டி.ஓ., ஜெகநாதன், சப் கலெக்டர், தாசில்தார்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.மாவட்ட முதன்மை கோர்ட், மகளிர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, அரசுத்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சரவண மூர்த்தி, ஆர்.டி.ஓ., ஜெகநாதன், சப் கலெக்டர், தாசில்தார்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.மாவட்ட முதன்மை கோர்ட், மகளிர் கோர்ட், கூடுதல் மாவட்ட கோர்ட்கள், ஜெ.எம், கோர்ட்டுகள், தாலுகா கோர்ட்களில் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்று, வழக்கு நிலவரம் தொடர்பாக பேசினர். அரசுத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு துறைவாரியாக நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக பேசினர்.அரசுத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், அந்தந்த அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்கள் சார்ந்த நகர்வு என்பதால், சட்ட விதிமுறைகளை நன்கு சரிபார்த்த பிறகு, அதற்கு தகுந்தபடி வழக்குகளை நடத்தி வெற்றிகாண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X