பொது செய்தி

இந்தியா

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும்
Ram Nath Kovind, President, Independence Day, address

புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.


latest tamil news



தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியின் மாநில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். அகில இந்திய வானொலியில் இரவு, 9:30 மணிக்கு ஜனாதிபதியின் உரை மாநில மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
14-ஆக-202111:34:28 IST Report Abuse
 N.Purushothaman இந்த நாள் ஆக 14 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் ....பிரிவினை என்கிற பெயரில் பல லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர்.. சில ஆயிரம் பெண்களின் கற்புக்கள் சூறையாடப்பட்டன. சில லட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டன. சில லட்சம் குழந்தைகள் அனாதையாகினர்.. இப்படி நடந்த கொடூரங்களை காங்கிரஸ் கட்சி ஒரு நினைவு தினமாக கூட அனுசரிக்காமல் அவர்களின் தோல்வியை மறைக்க இதை அப்படி எளிதாக கடந்து செல்வது மனசாட்சி உள்ள எந்த ஒரு தேசபக்த இந்தியானாலும் பொறுத்துக்கொள்ளவோ அல்லது இந்த அவலத்தை சகித்துக்கொள்ளவோ முடியாது ...மதத்தின் பெயரால் சூறையாடப்பட்ட அப்பாவி இந்துக்களின் உயிருக்காக நாம் குறைந்த பட்சம் பிரார்த்தனையாவது செய்வோம் .....
Rate this:
Manisekar - Chennai,இந்தியா
14-ஆக-202112:52:38 IST Report Abuse
Manisekarஇப்போதுதான் எல்லோருக்கும் உண்மை புரிய ஆரம்பித்துள்ளது, கான் கிராஸ் சுதந்திரத்துக்கு பிறகு நமக்கு அதிக துரோகங்களையே செய்துள்ளது....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஆக-202110:41:40 IST Report Abuse
Lion Drsekar யாராவது ஒருவராவது இந்த செய்திக்கு மதிப்பு அளித்தால் நல்லது புரிகிறது ஜனாதிபதி என்றால் என்றென்றும் எல்லோர் மனதிலும் நீக்கமற வாழ்வது நமது குழந்தை உள்ளம் கொண்ட, தூய மனதுடன் கள்ளம் கபடம் இல்லாமல் எல்லோரிடமும் ஒன்றாகப் பழகும் ஒரே ஒரு தலைவர் நிரந்திர தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X