நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும்
Ram Nath Kovind, President, Independence Day, address

புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.


latest tamil news



தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியின் மாநில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். அகில இந்திய வானொலியில் இரவு, 9:30 மணிக்கு ஜனாதிபதியின் உரை மாநில மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X