பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல் சூளை விதிமீறல் அறிக்கை: 26க்குள் அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
செங்கல் சூளைகள் விதிமீறல் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுக் கமிட்டியின் அறிக்கையை, வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய ஐந்து கிராம ஊராட்சி பகுதிகளில், 197 செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி

செங்கல் சூளைகள் விதிமீறல் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுக் கமிட்டியின் அறிக்கையை, வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய ஐந்து கிராம ஊராட்சி பகுதிகளில், 197 செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வந்தன. இவற்றுக்காக பட்டா மற்றும் அரசு நிலங்களில், வரம்பு மீறி மண் அள்ளப்பட்டு வந்தது. இதனால் சுற்றுச்சூழல், விவசாயம், நீர்நிலைகள்,கனிம வளம், மக்களின் ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில், ஐந்து நாட்கள் தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. இந்தத் தொடர் கட்டுரையை, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளின் விதிமீறல் தொடர்பாக, கூட்டுக்கமிட்டி அமைத்து, நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, கூட்டுக்கமிட்டி அமைக்கப்பட்டு, தடாகம் பகுதி செங்கல் சூளைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையில், கோவை மாவட்ட செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு, 'ஏற்கனவே இது தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்கு இணையாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை' என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தனர்.கடந்த 10ம் தேதி, இந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தீர்ப்பாயத்தின் நீதிபதி ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'வரும் 26ம் தேதிக்குள், கூட்டுக்கமிட்டி தன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்று உத்தரவிட்டுள்ளனர். -நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X