பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., கால்வாயில் ஓட்டை: தண்ணீர் நிறுத்தி சீரமைப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் ஓட்டை ஏற்பட்டதால், தண்ணீர் நிறுத்தப்பட்டு, உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி., பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த, 3ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாயில் வினாடிக்கு, 935 கனஅடி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., பிரதான கால்வாயில் ஓட்டை ஏற்பட்டதால், தண்ணீர் நிறுத்தப்பட்டு, உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி., பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், நான்காம் மண்டல பாசனத்துக்கு கடந்த, 3ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாயில் வினாடிக்கு, 935 கனஅடி தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கெடிமேடு அருகே, பிரதான கால்வாய் பக்கவாட்டு சுவரில் நேற்று காலை, ஓட்டை ஏற்பட்டு, தண்ணீர் விரயமானது.அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. செயற்பொறியாளர் பழனிவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஐந்து அடி ஆழத்துக்கு ஓட்டை விழுந்துள்ளது கண்டறியப்பட்டது. அங்கு மணல் மூட்டை அடுக்கி, சீரமைப்பு பணி துவங்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயின் கீழே, மழைநீர் செல்லும் வகையில் கீழ் நீர் போக்கி உள்ளது. நீர் அழுத்தம் காரணமாக கால்வாய் பக்கவாட்டில் ஓட்டை விழுந்திருக்கலாம். தண்ணீர் விரயத்தை கட்டுப்படுத்த, கான்கிரீட்டால் சீரமைப்பு பணி நடக்கிறது. பணி முடிந்ததும், தண்ணீர் விடப்படும்' என்றனர்.தண்ணீர் திருட்டு?கால்வாயில் பக்கவாட்டு சுவர் முழுவதும் நன்றாக உள்ள சூழலில், ஒரு இடத்தில் மட்டும் ஓட்டை ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அப்பகுதியில் லாரிகளில் தண்ணீர் திருடப்படுகிறது; அவர்களது கைவரிசையாக இருக்கலாம், என, விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X