பொது செய்தி

இந்தியா

சேமிப்பில் இளவயதினர்: கொரோனா தந்த பாடம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நமக்கு கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் பல. அவற்றில் சேமிப்பும் ஒன்று. அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் பங்கேற்ற இளம்வயதினரில், 79.3 சதவீதம் பேர், கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் தான் சேமிக்கவே துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள், சொத்து உருவாக்கம் தான் தங்களுடைய தற்போதைய முன்னுரிமையாக இருப்பதாகவும்
savings, Corona Crisis, சேமிப்பு

புதுடில்லி: கொரோனா நமக்கு கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் பல. அவற்றில் சேமிப்பும் ஒன்று. அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் பங்கேற்ற இளம்வயதினரில், 79.3 சதவீதம் பேர், கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் தான் சேமிக்கவே துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள், சொத்து உருவாக்கம் தான் தங்களுடைய தற்போதைய முன்னுரிமையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, ஆன்லைன் முதலீட்டு தளமான, 'குரோவ்' நிறுவனம் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரியவந்து உள்ளது.


latest tamil news


இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: சேமிப்பு குறித்து இளம் வயதினர் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய, 18 முதல் 30 வயது பிரிவில், நாடு முழுக்க உள்ள 20 ஆயிரம் பேர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 18.3 சதவீதம் பேர், தங்களுடைய சேமிப்பை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக துவங்கியதாகவும்; 2.4 சதவீதம் பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே சேமிக்க துவங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 30.6 சதவீதம் பேர், உறவினர்கள், நண்பர்கள் அறிவுரையின்படி முதலீட்டை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்து உள்ளனர். 27.4 சதவீதம் பேர் செய்திகள் படித்து மேற்கொண்டதாகவும், 23.4 சமூக ஊடகங்களின் தாக்கத்தால் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். 4.6 சதவீதம் பேரே, முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனைப்படி முதலீடு செய்துள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X