சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை திருப்பி கேட்ட நண்பர் படுகொலை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை:மதுரவாயல், வேம்புலி நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 28. இவரது நண்பர் பாலாஜி, 22. சில மாதங்களுக்கு முன் பாலாஜி, தன் தாயின் மருத்துவ செலவுக்கு சதீஷிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தராமல், பாலாஜி அலைக்கழித்தார். நேற்று மாலை, பணத்தை கேட்க பாலாஜியின் வீட்டிற்கு சென்ற சதீஷ், பாலாஜியின் பெற்றோரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால்

சென்னை:மதுரவாயல், வேம்புலி நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 28. இவரது நண்பர் பாலாஜி, 22. சில மாதங்களுக்கு முன் பாலாஜி, தன் தாயின் மருத்துவ செலவுக்கு சதீஷிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தராமல், பாலாஜி அலைக்கழித்தார். நேற்று மாலை, பணத்தை கேட்க பாலாஜியின் வீட்டிற்கு சென்ற சதீஷ், பாலாஜியின் பெற்றோரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, சதீஷை ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினார். மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X