பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்தது எப்படி? தலிபான்கள் விளக்கம்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி : 'ஆப்கன் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்து விட்டார். தலிபான்கள் அவரை கொலை செய்யவில்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது சொகைல் ஷகீம் கூறியதாவது: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய
Danish Siddiqui, Taliban, Photojournalist

புதுடில்லி : 'ஆப்கன் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்து விட்டார். தலிபான்கள் அவரை கொலை செய்யவில்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது சொகைல் ஷகீம் கூறியதாவது: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய பத்திரிகையாளர் சித்திக், தலிபான்களால் கொலை செய்யப்படவில்லை. அவர் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டார். தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு சித்திக் தனியாக சென்றதால், துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்து விட்டார். அவரை யார் சுட்டது என கண்டுபிடிக்க முடியாது. அவரை தலிபான்கள் பிடித்து சித்ரவதை செய்தனர் என்பது தவறான தகவல்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




கட்டாய திருமணம்


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன், தலிபான்கள் வன்முறை வெறியாட்டம் ஆடி வருகின்றனர். கைப்பற்றிய பகுதியில் ஆப்கன் ராணுவ வீரர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதாக கூறப்படுகிறது. மேலும், தங்களை திருமணம் செய்து கொள்ளும்படி திருமணம் ஆகாத பெண்களை தலிபான்கள் கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
14-ஆக-202123:32:59 IST Report Abuse
Rajas தாலிபான்கள் ஒரு உலக பிரச்சினை. அமெரிக்கா இவர்களை அழிக்காமல் போனது வருத்தம். தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்காவோடு மற்ற நாடுகள் சேர்ந்து இவர்களை அடியோடு அழித்திருக்கலாம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஆக-202120:38:20 IST Report Abuse
Vena Suna அவர்கள் ரத்தத்திலேயே இப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கிறது ..
Rate this:
Cancel
Rocky - Doha,கத்தார்
14-ஆக-202119:49:04 IST Report Abuse
Rocky இந்தியாவில் சௌகர்யமாக இருந்துகொண்டு இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சைனாவிற்கு ஷூ பாலிஷ் போட்டுக்கொண்டிருக்கும் தேசத்துரோகிகள் தற்போது ஆப்கானிஸ்தான் செல்லலாம், உங்களுக்கான அரசு அங்குதான் ஷரியத் சட்டங்களை பின்பற்றி நடைபெறவுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X