கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை: போடிநாயக்கனுார் தொகுதி அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.வும் முன்னாள் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் தேர்தல் கமிஷன் பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவரை

சென்னை: போடிநாயக்கனுார் தொகுதி அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.வும் முன்னாள் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் தேர்தல் கமிஷன் பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறங்கினார். இதில் 11 ஆயிரத்து 21 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் மனுவுக்கு செப். 24க்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் கமிஷன் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

உதயநிதி வழக்கு

இதற்கிடையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. - எம்.எல்.ஏ. உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் தன் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி இரண்டு வாரங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X