சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தண்ணீரில் கரையும் கடிகாரம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பயன்படுத்திய பின், தண்ணீரில் கரைந்துவிடும் மின்னணு உதிரி பாகங்களை சீனாவிலுள்ள டியான்ஜின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.இந்த புதிய முறையில் தயாரித்த மின்னணு பொருட்கள், தண்ணீரில் 40 மணி நேரத்திற்குள் முற்றிலும் கரைந்து மாயமாகிவிடும். டியான்ஜின் ஆராய்ச்சியாளர்கள், எளிதில் மட்கிவிடும் தன்மையுள்ள பாலிவினைல் ஆல்கஹால், துத்தநாகம் மற்றும் வெள்ளி நேனோ
 தண்ணீரில் கரையும் கடிகாரம்

பயன்படுத்திய பின், தண்ணீரில் கரைந்துவிடும் மின்னணு உதிரி பாகங்களை சீனாவிலுள்ள டியான்ஜின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

இந்த புதிய முறையில் தயாரித்த மின்னணு பொருட்கள், தண்ணீரில் 40 மணி நேரத்திற்குள் முற்றிலும் கரைந்து மாயமாகிவிடும். டியான்ஜின் ஆராய்ச்சியாளர்கள், எளிதில் மட்கிவிடும் தன்மையுள்ள பாலிவினைல் ஆல்கஹால், துத்தநாகம் மற்றும் வெள்ளி நேனோ கம்பிகள் போன்ற பொருட்களை வைத்து ஒரு கைக் கடிகாரம் ஒன்றை தயாரித்தனர்.

குறுகிய கால பயனை மனதில் வைத்து தயாரித்த இந்த கடிகாரத்தின் பாகங்கள், வியர்வையின் ஈரத்திற்கு கரையாமல் இயங்கியது. ஆனால், தண்ணீரில் விரைந்து கரைந்துவிட்டது.

இதுபோன்ற மின்னணு பொருட்கள், சில ஆண்டுகள் நீடிக்கும்படி தயாரிக்க முடிந்தால், மின்னணு கழிவுகள் என்ற சிக்கலுக்கே இடமில்லாமல் போய்விடும் என டியான்ஜின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில், மின்னணு குப்பை பெரும் சவாலாக ஆகிவரும் நிலையில், இத்தகைய புதுமைகள் நிச்சயம் நல்ல தீர்வாக அமையும். மறுசுழற்சியைவிட மேம்பட்ட தீர்வு இது என்றே சொல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X