சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வெப்ப மின் நுட்பம்!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிதாக ஒரு வெப்ப மின் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். தகர செலினைடு வகையை சார்ந்த அப் பொருள், தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றும் திறன் கொண்டது.வெப்ப மின்பொருளின் ஒருபுறத்தை சூடாக்கி, மறுபுறத்தை சற்றே சில்லென வைத்திருக்க வேண்டும். இந்த வெப்ப வேறுபாட்டால்,
வெப்ப மின் நுட்பம்!

அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிதாக ஒரு வெப்ப மின் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். தகர செலினைடு வகையை சார்ந்த அப் பொருள், தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் வீணாகும் வெப்ப ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றும் திறன் கொண்டது.

வெப்ப மின்பொருளின் ஒருபுறத்தை சூடாக்கி, மறுபுறத்தை சற்றே சில்லென வைத்திருக்க வேண்டும். இந்த வெப்ப வேறுபாட்டால், அப்பொருளில் உள்ள எலக்ட்ரான்கள், சில்லிட்ட பகுதி நோக்கி பாய்கின்றன. இதனால் அப்பொருளில் மின்சாரம் உற்பத்தியாகிறது.

நார்த்வெஸ்டர்ன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பொருள், மிக அதிகமான மின்கடத்தும் தன்மையையும், மிகக் குறைவான வெப்பம் கடத்தும் தன்மையையும் கொண்டு உள்ளது.

இதனால், இப்பொருளின் மின் உற்பத்தி திறன் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மின்னணு கருவி கள், இயந்திரங்கள், மின் ஆலைகள், ஏன் சமையல் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்தும் ஏராளமான வெப்பம் விரயமாகிறது. இந்த சூட்டினை நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மின்சாரமாக மாற்ற உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X