பொது செய்தி

தமிழ்நாடு

காலில் விழுந்து விவசாயி கதறிய சம்பவத்தில் திடீர் திருப்பம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
அன்னூர்: அரசு ஊழியர் ஒருவர், விவசாயி காலில் விழுந்து கதறிய சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஓட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், விவசாயி ஒருவர் காலில் தலித் கிராம உதவியாளர் விழுந்து கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாயி மீது வன்கொடுமை சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை

அன்னூர்: அரசு ஊழியர் ஒருவர், விவசாயி காலில் விழுந்து கதறிய சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஓட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், விவசாயி ஒருவர் காலில் தலித் கிராம உதவியாளர் விழுந்து கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாயி மீது வன்கொடுமை சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கிராம உதவியாளர் காலில் விழுவதற்கு முன்னதாக வாக்குவாதம் செய்த விவசாயி கோபால் சாமியை, கிராம உதவியாளர் அறைந்து கீழே தள்ளும் காட்சி வெளியாகி உள்ளது. மேலும் விவசாயியை தவறான வார்த்தையில் திட்டுவது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து கோவை வடக்கு ஆர்டிஓ சம்பந்தப்பட்ட கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X