முறைகேடாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்ததால் அமளி: சிதம்பரம் விளக்கம்

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ''ராஜ்யசபாவில், மத்திய அரசு முறைகேடாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்ததால் தான், கடைசி நாளில் கடும் அமளி ஏற்பட்டது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கூறினார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு காங்., மூத்த தலைவர் சிதம்பரம் அளித்த பேட்டி: மத்திய பா.ஜ., ஆட்சியில் பார்லி., ஜனநாயகம் கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில்
முறைகேடாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்ததால் அமளி: சிதம்பரம் விளக்கம்

புதுடில்லி: ''ராஜ்யசபாவில், மத்திய அரசு முறைகேடாக மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்ததால் தான், கடைசி நாளில் கடும் அமளி ஏற்பட்டது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கூறினார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு காங்., மூத்த தலைவர் சிதம்பரம் அளித்த பேட்டி: மத்திய பா.ஜ., ஆட்சியில் பார்லி., ஜனநாயகம் கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் சபாநாயகர் இருக்கையும், ராஜ்சபாவில் தலைவர் இருக்கையும் நடுநிலையாக செயல்படவில்லை. எதிர்க்கட்சிகள் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தான் மழைக்கால கூட்டத்தொடரை மத்திய அரசு முன் கூட்டியே முடித்துவிட்டது.

ராஜ்யசபாவில் கடைசி நாளில் முறைகேடாக மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. அமளிக்கு காரணம் மத்திய அரசு தான்.கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் எந்த விவாதத்திலும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்கவில்லை.

மத்திய அரசை வழிநடத்தும் இந்த இரண்டு அறிவாளிகளும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படாவிட்டால் பார்லி.,யையே முடக்கிவிடுவர். அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமையும். இது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுகள், சந்திப்புகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஆக-202115:29:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வாங்கிய காசுக்கு அமளி நடத்தப்பட்டது. சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அமளி நடந்ததே அன்று எப்படி இருந்தது.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
14-ஆக-202114:54:54 IST Report Abuse
jayvee செம தலைவரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X