பொது செய்தி

தமிழ்நாடு

5 சவரன் வரை நகை கடன் பெற்ற பயனாளி விபரம் அனுப்ப உத்தரவு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.அக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பொது நகை கடன் பிரிவில், நகை கடன் பெற்றவர்களின்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பொது நகை கடன் பிரிவில், நகை கடன் பெற்றவர்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நடப்பாண்டு மார்ச், 31 நிலவரப்படி, 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட முழு விபரங்களையும், வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை, நேற்று உத்தரவிட்டுள்ளது.மேலும், ஜூலை, 31 நிலவரப்படியான, மேற்கண்ட விபரங்களை அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X