தகனம் செய்ய பணம் இல்லாததால் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உடல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஐதராபாத்: மரணம் அடைந்த தாத்தா உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பர்க்கலா நகரில் வசித்தவர் பாலையா, 95. பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பேரன் நிகில், 23, இவருடன் வசித்து வந்தார். பாலையாவின் பென்ஷன் பணத்தில் தான் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
தகனம் செய்ய பணம் இல்லாததால்  பிரிட்ஜில் வைக்கப்பட்ட உடல்

ஐதராபாத்: மரணம் அடைந்த தாத்தா உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பர்க்கலா நகரில் வசித்தவர் பாலையா, 95. பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பேரன் நிகில், 23, இவருடன் வசித்து வந்தார். பாலையாவின் பென்ஷன் பணத்தில் தான் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடைய உறவினர்கள் கம்மாரெட்டி மாவட்டத்தில் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிகில் வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அருகிலுள்ள வீட்டில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து நிகில் வீட்டுக்குள் சோதனை நடத்தினர். குளிர் சாதன பெட்டிக்குள் பாலையா சடலம் இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் தாத்தா இறந்து விட்டதாகவும், அடக்கம் செய்ய பணம் இல்லாததால் உடலை போர்வையில் சுற்றி, குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும் நிகில் கூறினார். பாலையா உடலில் காயம் எதுவும் இல்லை என்றாலும் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார், நிகிலிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X