தமிழ்நாடு

நல்ல பல திட்டங்களை எதிர்பார்த்திருந்த நகரங்கள்: கோவை, திருப்பூருக்கு உடனடி பயன் இல்லை

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: ''தொழில் முன்னேற்றத்தில் பெரும் வாய்ப்புள்ள நகரங்களான கோவையும், திருப்பூரும் நல்ல பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்தன. ஆனால், உடனடியாக பயன் பெறும் விதத்தில் எந்த திட்டமும், பட்ஜெட்டில் இல்லை,'' என, பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன் கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட் குறித்து சேதுராமன் சாத்தப்பன் கூறியதாவது:சென்னை நந்தம்பாக்கத்தில், 165 கோடி
 நல்ல பல திட்டங்களை எதிர்பார்த்திருந்த நகரங்கள்:  கோவை, திருப்பூருக்கு உடனடி பயன் இல்லை


கோவை: ''தொழில் முன்னேற்றத்தில் பெரும் வாய்ப்புள்ள நகரங்களான கோவையும், திருப்பூரும் நல்ல பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்தன. ஆனால், உடனடியாக பயன் பெறும் விதத்தில் எந்த திட்டமும், பட்ஜெட்டில் இல்லை,'' என, பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன் கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து சேதுராமன் சாத்தப்பன் கூறியதாவது:சென்னை நந்தம்பாக்கத்தில், 165 கோடி செலவில் புதிய நிதிநுட்ப நகரம், காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, திருவள்ளூரில் மின்வாகனப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனத்தில் உணவுப் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருள் தயாரிப்பு பூங்கா, தமிழகத்தில் விழுப்புரம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் புதிய டைடல் பார்க், கோவையில், 225 கோடி செலவில் பாதுகாப்புக் கருவிகள் உற்பத்தி பூங்கா ஆகியவை அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகிறது.பலர் இவற்றில் தொழில் துவங்க முன்வருவர் என்றாலும், தயாரித்த பொருட்களை விற்பனை செய்வது என்பது பல உற்பத்தியாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தமிழக அரசும், மத்திய அரசு போல மின்னணு கொள்முதல் தளத்தை கொண்டு வருவோம் என்று சொல்லியிருப்பதும் நல்லது.

அது மத்திய அரசின், 'ஜெம்' திட்டத்தை போல இருக்க வேண்டும். அந்த மின்னணு கொள்முதல்களில் தமிழகத்தை சேர்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 70 சதவீதம் கொள்முதல் வாய்ப்புகள் இருக்க வேண்டும்; அது மிகவும் முக்கியம்.


ஏற்றுமதி


இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்தின் ஏற்றுமதி முன்னேற்றத்துக்கு, பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பு இல்லாதது குறை தான். பல மாநிலங்களில் இருப்பது போல மாவட்டம் தோறும் ஏற்றுமதி வளர்ச்சி கழகங்கள், நல்ல இணைய வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இது பெரிய பொருட்செலவை தரக்கூடியது அல்ல. ஆனால், தமிழகத்தின் ஏற்றுமதியில் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.


அறைகலன் உற்பத்தி


உலகளவில் அறைகலன்களுக்கு வாய்ப்பு அதிகரித்து வருகிறது. துாத்துக்குடியில், 4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க, 1,000 கோடியில் அறைகலன் சர்வதேச பூங்கா அமைக்கப்படுவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறைகலன்கள் உற்பத்தியில் வெளிநாட்டு தொழில்நுட்பம், முதலீடுகள் முக்கியமாக தேவை. ஆனால் இது, 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும், உலகளவில் விலைப்போட்டி நிறைந்த ஒரு துறையாகும்.


வாய்ப்புள்ள நகரங்கள்


கோவையும், திருப்பூரும் தொழில் முன்னேற்ற அளவில் பெரிய வாய்ப்புள்ள நகரங்கள். இந்நகரங்கள் நல்ல பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்தன. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களும் செயல்படுத்த, இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். உடனடியாக இந்த இரண்டு மாவட்டங்களும் எந்த பயனும் பெறாது என்பது ஒரு குறை தான்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஆக-202112:53:36 IST Report Abuse
J.Isaac காலை வாரிவிட்ட மாவட்டங்கள். கொங்குநாடு பிரச்சினை வேற. அதனால் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X