தந்தை என உரிமை கோரிய பெண்: கேரளாவை கலக்கும் இரண்டாவது சரிதா

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் சரிதா என்ற பெண் தனது தந்தை என உரிமை கோரியதால் மனமுடைந்த ஓய்வு அரசு போக்குவரத்து கழக டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவனந்தபுரம் அருகே முள்ளசேரியை சேர்ந்தவர் விஜயமோகனன் 68. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக டிரைவர். மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சரிதா 41, என்பவர் அவரது வீட்டுக்கு சென்று விஜயமோகனனின் மகள் என

திருவனந்தபுரம்: கேரளாவில் சரிதா என்ற பெண் தனது தந்தை என உரிமை கோரியதால் மனமுடைந்த ஓய்வு அரசு போக்குவரத்து கழக டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம் அருகே முள்ளசேரியை சேர்ந்தவர் விஜயமோகனன் 68. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக டிரைவர். மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சரிதா 41, என்பவர் அவரது வீட்டுக்கு சென்று விஜயமோகனனின் மகள் என கூறினார். விஜயமோகனன் புகாரில் நெடுமங்காடு போலீசார் சரிதாவை விசாரித்தனர். அப்போது விஜயமோகனன் தான் தனது தந்தை என்று உறுதியாக கூறினார். இதற்கு பின்னணியில் தம்பி சதீஷ்குமரர் உள்ளதாக விஜயமோகனன் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு சென்ற சரிதாவின் தலையில் மண்வெட்டியால் அடித்த விஜயமோகனன், தம்பி வீட்டின் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்தார். சரிதா யார், அவரது பின்னணி பற்றி நெடுமங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். காங்., உம்மன்சாண்டி ஆட்சியில் ஒரு சரிதா பல அரசியல்வாதிகள், போலீசாரின் துாக்கத்தை கெடுத்த கதையை இதனுடன் கூறி புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X