பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி கருத்து

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம்: 'தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையும், வெள்ளை அறிக்கையும் கலந்தே, பட்ஜெட் வாசிக்கப்பட்டு உள்ளது' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையும், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையும் கலந்தே வாசிக்கப்பட்டு உள்ளது. பாசன திட்டம், குளம் துார்வாருதல், கதவணை கிராமங்களுக்கு
பட்ஜெட் குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி கருத்து

பல்லடம்: 'தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையும், வெள்ளை அறிக்கையும் கலந்தே, பட்ஜெட் வாசிக்கப்பட்டு உள்ளது' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையும், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையும் கலந்தே வாசிக்கப்பட்டு உள்ளது. பாசன திட்டம், குளம் துார்வாருதல், கதவணை கிராமங்களுக்கு குடிநீர் வசதி, பசுமை திட்டத்தின் கீழ், 33 சதவீத காடுகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்க கூடியவை. ஆனைமலையாறு - நல்லாறு, பாண்டியாறு - புன்னம்புழா, மற்றும் கோதாவரி - கிருஷ்ணா இணைப்புக்கு முயற்சி செய்யப்படும் என்ற, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இது காகிதமில்லா கணினி பட்ஜெட்டாகவே கருதுகிறோம். இருப்பினும், விவசாயிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வேளாண் தொழிலை காப்பதற்காக சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, செல்லமுத்து கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் புகழ்ச்சி மட்டுமே இருக்கும் இதுவே பாஜக அரசாக இருந்திருந்தால் பல கோடி கண்டன குரல்கள் வந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X