மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது ராகுலின் டுவிட்டர் கணக்கு

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்ட காங்கிரஸ் மற்றம் ராகுலின் டுவிட்டர் கணக்குகள் இன்று விடுவிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.டில்லியை சேர்ந்த 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். 'இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை
Satyameva Jayate, Twitter, Rahul, Rahulgandhi, congress, cong டுவிட்டர்,ட்வீட்டர், ராகுல், ராகுல்காந்தி, காங்கிரஸ், காங்,

புதுடில்லி: கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்ட காங்கிரஸ் மற்றம் ராகுலின் டுவிட்டர் கணக்குகள் இன்று விடுவிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

டில்லியை சேர்ந்த 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். 'இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை உடனிருப்பேன்' என, சிறுமியின் பெற்றோருக்கு உறுதி அளித்தார்.இந்த சந்திப்பு தொடர்பான 'வீடியோ'வை ராகுல், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், சிறுமியின் பெற்றோர் முகம் மறைக்கப்படவில்லை.
'போக்சோ' சட்டப்படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. இதையடுத்து, ராகுலின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் சில நிர்வாகிகளின் கணக்கும் முடக்கப்பட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ராகுல், ‛'டுவிட்டர் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதுடன், நாட்டின் அரசியல் நடவடிக்கையிலும் தலையிடுகிறது,'' என குற்றம்சாட்டினார்.


latest tamil news



இந்நிலையில், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் விடுவித்தது. முடக்கப்பட்ட மற்றவர்களின் டுவிட்டர் கணக்குகளும் விடுவிக்கப்பட்டன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ரோகன் குப்தா கூறுகையில், காங்கிரஸ் சார்ந்த அனைவரின் கணக்குளையும் டுவிட்டர் நிறுவனம் விடுவித்தது. இதற்கான காரணம் பற்றி கூறப்படவில்லை. டுவிட்டர் கணக்குகள் விடுவிக்கப்பட்டது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அக்கட்சி வெளியிட்ட முதல் பதிவில், வாய்மையே வெல்லும்‛சத்யமேவ ஜெயதே' எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202104:30:38 IST Report Abuse
ராஜா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா நாராயணா...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-202103:30:25 IST Report Abuse
meenakshisundaram அட , இன்னுமில்ல மோசமா நடந்துப்பான் ?கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலீன்னா ராகுல் காஞ்ச மண்டை ரொம்பல்லே காஞ்சிடும் ?டிராக்டரை எடுத்துக்கிட்டு பார்லிமென்டை உழுவதற்கு கிளம்பிடுமே ?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-ஆக-202120:56:03 IST Report Abuse
Nagarajan D தடைப்பட்டிருந்த நகைச்சுவை மீண்டும் ஆரம்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X