கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிதியில் ஊழல்: ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை: கொரோனா நிவாரண நிதியில், 11.55 லட்சம் ரூபாய்க்கு கிருமி நாசினி, முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சி துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஓமலுார் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த, 2020ம் ஆண்டு, கொரோனா தொற்று முதல்

சென்னை: கொரோனா நிவாரண நிதியில், 11.55 லட்சம் ரூபாய்க்கு கிருமி நாசினி, முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சி துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலுார் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த, 2020ம் ஆண்டு, கொரோனா தொற்று முதல் அலையில், பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில், கொரோனா நிவாரண நிதியில் இருந்து, கிருமி நாசினி, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.ஒரு லிட்டர், 76.50 ரூபாய் விற்கப்பட்ட கிருமி நாசினியை, 280 ரூபாய் என, 5,000 லிட்டர் வாங்கப்பட்டுள்ளது. 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசங்கள், 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை, 180 ரூபாய்க்கும் வாங்கி உள்ளனர்.

மொத்தமாக, 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு, இந்த பொருட்கள் வாங்கியதில், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, என் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் மற்றும் சேலம் கலெக்டருக்கு புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கொரோனா நிவாரண நிதியில் நடந்த இந்த ஊழல் குறித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு: மனுதாரர், 25 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்யும் பட்சத்தில், இந்த புகார் குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தணிக்கை செய்ய வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், டிபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பி அளிக்கலாம். முறைகேடுகள் நடந்து உள்ளதற்கு முகாந்திரம் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக, தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X