பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதிப்பு 7 மாவட்டங்களில் அதிகரிப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, 100யை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள, 285 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.59 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில், 236; சென்னையில், 211; ஈரோட்டில், 177; சேலத்தில், 120; தஞ்சாவூரில், 114; செங்கல்பட்டில், 108;

சென்னை: தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, 100யை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள, 285 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.59 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில், 236; சென்னையில், 211; ஈரோட்டில், 177; சேலத்தில், 120; தஞ்சாவூரில், 114; செங்கல்பட்டில், 108; திருப்பூரில், 105 பேர் என, 1,933 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட, 110 சிறார்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட, 279 முதியவர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை, 95 ஆயிரத்து, 109 சிறார்களும், 3 லட்சத்து, 72 ஆயிரத்து, 512 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை, 3.94 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 25 லட்சத்து, 84 ஆயிரத்து, 969 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்களில் சிகிச்சை முடிந்து நேற்று, 1,887 பேர் உட்பட, 25 லட்சத்து, 30 ஆயிரத்து, 96 பேர் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது கோவையில், 2,358; சென்னையில், 2,098; ஈரோட்டில், 1,745; செங்கல்பட்டில், 1,169 பேர் என, 20 ஆயிரத்து, 411 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றால், 34 பேர் உட்பட, 34 ஆயிரத்து, 462 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X