பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிலங்கள் பற்றிய விபரம் அறிய நில மேலாண்மை அமைப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை: ''பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட, அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். அதில், அரசு நிலங்கள் தொடர்பான முழு விபரங்கள் இடம்பெறும்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் கூறியதாவது: தரவுகளை மையமாக வைத்து, நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக, முக்கிய முயற்சிகளை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை: ''பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட, அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். அதில், அரசு நிலங்கள் தொடர்பான முழு விபரங்கள் இடம்பெறும்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் கூறியதாவது: தரவுகளை மையமாக வைத்து, நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக, முக்கிய முயற்சிகளை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின், உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலும் உள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள, அனைத்து பொது சேவைகளிலும், மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும், மின்னணு கொள்முதல் முறை, கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த, அரசுக்கு தனி மின்னணு கொள்முதல் வலைதளம் உருவாக்கப்படும்.

பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு, மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதில், அரசு நிலங்கள் தொடர்பான முழு விபரங்களும் அடங்கும்.நீதிமன்றத்தில், பெரும் மதிப்பிலான, நிதி பொறுப்புகள் மற்றும் நிர்வாகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பல வழக்குகள், பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க, வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

இந்த அமைப்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த சட்ட வல்லுனர்கள் அடங்கிய, அனுபவமிக்க குழுவால் கண்காணிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார். சிறப்பு செயலகம்!சட்டசபை நுாற்றாண்டை குறிக்கும் வகையில், 1921 முதல் நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். சபையின் நிதி குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்த, உரிய அலுவலர்களுடன், கணினி மயமாக்கப்பட்ட, சிறப்பு செயலகம் அமைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X