பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு, கோபியில் மாலையில் மழை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகரில், நேற்று காலை முதல் கடும் புழுக்கமான சூழல் நிலவியது. வெயில் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில், 1:00 மணிக்கு மேல் மேகமூட்டம் உருவானது. இந்நிலையில் மாலை, 3:20 மணி முதல், 3:50 மணி வரை பலத்த மழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டப்பணி முடியாத நிலையில், பல சாலை தோண்டிப்போட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.வி., சாலை, மணிக்கூண்டு பகுதி, காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை போன்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில், நேற்று காலை முதல் கடும் புழுக்கமான சூழல் நிலவியது. வெயில் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில், 1:00 மணிக்கு மேல் மேகமூட்டம் உருவானது. இந்நிலையில் மாலை, 3:20 மணி முதல், 3:50 மணி வரை பலத்த மழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டப்பணி முடியாத நிலையில், பல சாலை தோண்டிப்போட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.வி., சாலை, மணிக்கூண்டு பகுதி, காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை போன்ற இடங்களில் அதிகமாக மழை நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

* கோபி சுற்று வட்டார பகுதியில், சத்தி, மொடச்சூர், ஈரோடு சாலை, புதுப்பாளையம், பாரியூர் சாலை, மேட்டுவலவு, கச்சேரிமேடு உள்ளிட்ட பகுதியில், 3:30 மணிக்கு திடீரென மழை பெய்ய துவங்கியது. பத்து நிமிடம் மட்டுமே பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X