சிறந்த பேராசிரியர்கள்... தரமான கல்வி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கணபதியில் உள்ள, சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சி.எம்.எஸ்., அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறியதாவது: அறக்கட்டளை சார்பில், சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், சி.எம்.எஸ்., அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி,

கணபதியில் உள்ள, சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

சி.எம்.எஸ்., அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறியதாவது: அறக்கட்டளை சார்பில், சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, சி.எம்.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், சி.எம்.எஸ்., அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி, சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை, சிறந்த பேராசிரியர்களை கொண்டு வழங்கி வருகிறோம். மாணவர்களுக்கு சிறந்த வகுப்பறை, ஆய்வகம், நுாலகம், விளையாட்டு மைதானம், இன்டெர் நெட் வசதியுடன் கூடிய அறைகள் என, அனைத்தும் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இவர்களுக்கு... இலவச கல்வி!

சரவணம்பட்டியில் செயல்படுகிறது, கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி. கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், மெக்கானிக்கல், பி.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் அண்டு டேடா சயின்சஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு பிஸினஸ் சிஸ்டம்ஸ், எம்.இ., அப்ளைய்டு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்புகளும் உள்ளன. நடப்பாண்டு முதல், எம்.பி.ஏ., படிப்பும் துவக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, தாய் அல்லது தந்தையை இழந்த, விளையாட்டு மற்றும் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி அளிக்கிறோம்.இவ்வாறு, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.பணிக்கு தேவையான பயிற்சிமருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை, அபிராமி அறக்கட்டளையின் அபிராமி இன்ஸ்டிடியூஷன்ஸ் வழங்கி வருவதாக, அபிராமி மருத்துவமனை தலைவர் பெரியசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அபிராமி கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, அபிராமி மருத்துவமனையில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. எங்கள் கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், பணிபுரிய தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். டாக்டர்கள் செந்தில்குமார், உமாதேவி, பாலமுருகன் சுசரிதா ஆகியோரின் மேற்பார்வையில் மாணவ, மாணவியருக்கு, கல்வி சார்ந்த அனைத்து உதவிகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 97509 72984

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X