பொது செய்தி

தமிழ்நாடு

சேகோ ஆலையில் ஸ்டார்ச் மாவு, 250 லிட்டர் 'ஆசிட்' பறிமுதல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தலைவாசல், சார்வாயில் உள்ள குழந்தைவேல் என்பவரின் சேகோ ஆலையில், சேலம் சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் பத்மஜா தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, தலா, 100 லிட்டர் கொண்ட சல்ப்யூரிக் அமிலம், ?ஹட்ரோ பெராக்சைடு அமிலம், 50 லிட்டர் பாஸ்போரிக் அமிலம், 225 கிலோ கால்சியம் ?ஹப்போ குளோரைடு, 25 கிலோ சோடியம் பயோ

ஆத்தூர்: தலைவாசல், சார்வாயில் உள்ள குழந்தைவேல் என்பவரின் சேகோ ஆலையில், சேலம் சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் பத்மஜா தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, தலா, 100 லிட்டர் கொண்ட சல்ப்யூரிக் அமிலம், ?ஹட்ரோ பெராக்சைடு அமிலம், 50 லிட்டர் பாஸ்போரிக் அமிலம், 225 கிலோ கால்சியம் ?ஹப்போ குளோரைடு, 25 கிலோ சோடியம் பயோ சல்பைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஆசிட் பயன்படுத்தி தயார் செய்ததாக கருதப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான, 7,200 கிலோ ஸ்டார்ச் மாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சேகோ ஆலை உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர். அதிகாரிகள் கூறுகையில், 'ஜவ்வரிசியில் கலப்படம் இருக்க கூடாது. சேகோ ஆலையில், தடை செய்யப்பட்ட ஆசிட், பவுடர் இருந்தது. சந்தேகமான ஸ்டார்ச் மாவு பறிமுதல் செய்து, மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவில், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X