சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கணக்கில் கையாடல்? வங்கி மேலாளர் மீது புகார்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடி, மொரசப்பட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 38. இவர், பூலாம்பட்டியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் சேமிப்பு கணக்கில், 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளார். இதையறிந்த வங்கி மேலாளர் ரகுராம், 37, கடந்த டிசம்பரில், சதீஷ்குமாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது, சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு குறைந்த வட்டியே கிடைக்கும் எனவும், அத்தொகையை

இடைப்பாடி: இடைப்பாடி, மொரசப்பட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 38. இவர், பூலாம்பட்டியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் சேமிப்பு கணக்கில், 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளார். இதையறிந்த வங்கி மேலாளர் ரகுராம், 37, கடந்த டிசம்பரில், சதீஷ்குமாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது, சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு குறைந்த வட்டியே கிடைக்கும் எனவும், அத்தொகையை நீங்கள் முதலீடாக மாற்றும்போது கூடுதல் வட்டி கிடைக்கும் என கூறியுள்ளார். இதனால், மேலாளர் கொடுத்த பல கோப்புகளில், சதீஷ்குமார் கையெழுத்திட்டுள்ளார். பலமுறை கேட்டும், முதலீடு ரசீதை மேலாளர் கொடுக்கவில்லை. இதுபோன்று, சதீஷ்குமார் மட்டுமின்றி, தன்ராஜ் என்பவரும், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தனர். போலீசார், ரகுராமை, சேலம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X