சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு ஆபத்து உள்ளதாக ரூ.2.80 லட்சம் வசூல்: பெரம்பலூர் ஜோதிடரிடம் கிடுக்கி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி, ஒதியத்தூரை சேர்ந்த, ராமர் மனைவி நிர்மலா, 40. இவரது மகன் பிரவீன், 24, கப்பல் துறை பொறியியல் படிப்பு படித்துள்ளார். பெரம்பலூர், கணேஷ் நகரை சேர்ந்த ஜோதிடர் மாரிமுத்து, 38. இவர், கடந்த மாதம் ஒதியத்தூர் வந்து, பிரவீனுக்கு ஆபத்து உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும்; அரசு வேலை வாங்கி தர உதவுவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி நிர்மலா, ஜோதிடரிடம்,

கெங்கவல்லி: கெங்கவல்லி, ஒதியத்தூரை சேர்ந்த, ராமர் மனைவி நிர்மலா, 40. இவரது மகன் பிரவீன், 24, கப்பல் துறை பொறியியல் படிப்பு படித்துள்ளார். பெரம்பலூர், கணேஷ் நகரை சேர்ந்த ஜோதிடர் மாரிமுத்து, 38. இவர், கடந்த மாதம் ஒதியத்தூர் வந்து, பிரவீனுக்கு ஆபத்து உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும்; அரசு வேலை வாங்கி தர உதவுவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி நிர்மலா, ஜோதிடரிடம், 2.80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். நேற்று, பூஜை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அத்தொகையை, ஆத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொடுக்க ஜோதிடர் கூறியுள்ளார். நிர்மலா, உறவினர்களுடன் அங்கு சென்றனர். அப்போது ஜோதிடரிடம், ஏற்கனவே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர் மறுக்க, உறவினர்கள் சேர்ந்து, ஜோதிடரை, 'நன்கு' கவனித்துள்ளனர். ஆத்தூர் டவுன் போலீசார், ஜோதிடரை மீட்டு விசாரித்ததில், பணம் வாங்கி ஏமாற்றியது தொடர்பாக, கெங்கவல்லியில் புகார் உள்ளதால், அந்த ஸ்டேஷனுக்கு அனுப்பினர். அவர்கள் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவரது உதவியாளரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X