பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் மின்வேலி: விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஊட்டி: 'சோலார் மின்வேலி வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் அத்துமீறினால், வன சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், மின்வேலியில் சிக்கி, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் பலியாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள மசினகுடி சுற்றுவட்டாரத்தில், யானை வழித்தடம், பட்டா நிலங்கள், வருவாய்துறை நிலத்தை

ஊட்டி: 'சோலார் மின்வேலி வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் அத்துமீறினால், வன சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில், மின்வேலியில் சிக்கி, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் பலியாவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள மசினகுடி சுற்றுவட்டாரத்தில், யானை வழித்தடம், பட்டா நிலங்கள், வருவாய்துறை நிலத்தை ஆக்கிரமித்து பலர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், சில விவசாயிகள் சோலார் மின்வேலியில் அதிக ஓல்டேஜ் மின்சாரம் செலுத்தியும், மின்பாதையிலிருந்து நேரடியாக இணைப்பு கொடுப்பதால், வனவிலங்கு பலியாவது அதிகரித்துள்ளது. சூரிய மின் வேலியில் சிக்கி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆய்வு செய்து மின் வேலிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''சமீபகாலமாக மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் பலியாவது அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் மின்பாதையிலிருந்து நேரடியாக இணைப்பு கொடுப்பதால் இது போன்ற நிலை ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபட்டால் வன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்துறை நிலத்தில் ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து விவசாயம் செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X