தமிழக பட்ஜெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்: ஏ.இ.பி.சி., தலைவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்: ஏ.இ.பி.சி., தலைவர்

Added : ஆக 14, 2021
Share
திருப்பூர்: பட்ஜெட் அறிவிப்புகள், தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என, திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல்: விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியாக உள்ளது. திருப்பூர், விழுப்புரம், வேலுாரில் டைடல் பார்க்; தொழில்நுட்ப ஜவுளி துறை மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தமிழக பட்ஜெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்: ஏ.இ.பி.சி., தலைவர்

திருப்பூர்: பட்ஜெட் அறிவிப்புகள், தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என, திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல்: விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியாக உள்ளது. திருப்பூர், விழுப்புரம், வேலுாரில் டைடல் பார்க்; தொழில்நுட்ப ஜவுளி துறை மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. துணி நுால் துறைக்கு இயக்குனரகம் உருவாக்குதல், குறு, சிறு நிறுவனங்கள் மறு கட்டமைப்புக்கு தேவையான கடனுதவி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும். தமிழக பட்ஜெட்டை, ஏ.இ.பி.சி., வரவேற்கிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்: திருப்பூரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோடு, நாமக்கல்லில் புதிய சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பதால், ஜவுளித்துறை வளர்ச்சி மேலும் வேகம் பெறும். சென்னை, கோவையில் தொழிலாளர் பயன்பாட்டுக்கான குடியிருப்புகளை கட்டும் திட்டம் வரவேற்கத்தக்கது. இதேபோல், திருப்பூரிலும், இடம் தேர்வு செய்து, குடியிருப்புகளை கட்டவேண்டும். சிப்காட் பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் அமைப்பதால், பின்னலாடை துறை மீதான திருப்பூர் தொழில் முனைவோரின் முதலீடுகள் அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X