பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கான, பாலியல் அத்துமீறல்களை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.நீலகிரியில், கொரோனா பெருந்தொற்றால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு மாறுபட்ட சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, குழந்தை திருமணங்கள், பாலியல் ரீதியாக துன்புறுதலுக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது.கடந்த ஜன.,

ஊட்டி: நீலகிரியில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கான, பாலியல் அத்துமீறல்களை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரியில், கொரோனா பெருந்தொற்றால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு மாறுபட்ட சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, குழந்தை திருமணங்கள், பாலியல் ரீதியாக துன்புறுதலுக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது.கடந்த ஜன., முதல் ஜூலை மாதம் வரை, 10 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. 5 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் படி தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்கள் தொடர்பாக, 6 மாதத்தில், 60 பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.'பெண் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பிணையில் வெளியே வர முடியாதபடி நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் குழந்தைகளுக்கு எதிராக அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்டத்திலுள்ள, 3,000 பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும், 10 குழந்தைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை, விழிப்புணர்வை வீட்டிற்கு நேரடியாகவும், தொலை பேசி மூலமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X