மே.வங்கத்தில் பயிற்சி பெறாதவர்கள் ரயில்களை இயக்கினரா? ஈரோட்டில் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மே.வங்கத்தில் பயிற்சி பெறாதவர்கள் ரயில்களை இயக்கினரா? ஈரோட்டில் இருவர் கைது

Added : ஆக 14, 2021
Share
ஈரோடு: மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் 12 இரவு 8.30 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில் இன்ஜினை அடுத்த மாற்று திறனாளிகள் பெட்டியில் ரயில் டிரைவர்கள் சீருடையுடன் இரு வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர். சட்டையில் நேம் பாட்ச் இருந்தது. இதில் ஒருவர், மிகவும் சிறுவனாக காணப்பட்டார். அப்போது ரோந்து சென்ற

ஈரோடு: மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் 12 இரவு 8.30 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில் இன்ஜினை அடுத்த மாற்று திறனாளிகள் பெட்டியில் ரயில் டிரைவர்கள் சீருடையுடன் இரு வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர். சட்டையில் நேம் பாட்ச் இருந்தது. இதில் ஒருவர், மிகவும் சிறுவனாக காணப்பட்டார். அப்போது ரோந்து சென்ற ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமர், எஸ்.ஐ. மீனா, குற்றப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகியோர் சந்தேகம் அடைந்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் ரயில்வே பாதுகாப்பு படை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களது உடமைகளை சோதனை செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வைத்திருந்த பைக்குள் ரயிலை இயக்க, நிறுத்த பயன்படும் இரண்டு செட் கொடி, மல்டி பர்பஸ் டார்ச்லைட் இருந்தது. அவர்களிடம் இருந்த ரயில்வே அடையாள அட்டை இரண்டை கைப்பற்றி விசாரித்தனர். அது போலி என்பது தெரியவந்தது.இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் மஷிடாபாத், சாட்டை ஹரிராம்பூர் ஷர்துல் மகன் ஷோஹல் ஷேக், 17 மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஜாக் மகன் எஸ்ராபில் ஷேக், 21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.எஸ்ரா பில், பெருந்துறை கிளை சிறையிலும், ஷோஹல் ஷேக் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், மேற்கு வங்கத்தில் இரு ஒரிஜினல் ரயில் டிரைவர்கள் கீழ் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசஞ்சர் ரயிலை ஷோஹல் ஷேக் ஓட்டியுள்ளார். இதற்காக மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளார்.எஸ்ரா பில்லையும் ரயிலை இயக்க ஒரிஜினல் டிரைவரிடம் வேலை கேட்டு அழைத்து சென்றுள்ளார். இரு மாதங்கள் கழித்து பதில் கூறுவதாக ஒரிஜினல் டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எஸ்ரா பில், எர்ணாகுளத்தில் அதுவரை கட்டிட வேலை செய்வதாக கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார். தானும் இரண்டு மாதங்கள் வரை ஊரை சுற்றி பார்ப்பதாக கூறி ஷோஹல் ஷேக்கும் ரயிலில் ஏறி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர், தென்னக ரயில்வே பொது மேலாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜ., ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர், மேற்கு வங்க மாநிலம் சென்று சம்பந்தப்பட்ட ஒரிஜினல் ரயில் டிரைவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். பிடிபட்ட வாலிபர்கள் வங்கதேச பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய கிராமத்தை சேர்ந்தவர்கள். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X