அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் ரெய்டு ஏன்? எஸ்பி வேலுமணி விளக்கம்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோவை: திமுக.,வுக்கு என் மீது கோபம் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக
ரெய்டு, அதிமுக, வேலுமணி

கோவை: திமுக.,வுக்கு என் மீது கோபம் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுமணியின் வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வேலுமணி வந்தார். விமான நிலையத்தில் ஏராளமானோர் அவரை வரவேற்றனர்.பின்னர் நிருபர்களிடம் வேலுமணி கூறுகையில், கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தந்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பந்தாடப்படுகிறேன். வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். என் வீட்டில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்.

மக்கள் என் பக்கம் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி தொடர நான் முக்கிய காரணம் என்பதால், திமுகவுக்கு என் மீது கோபம் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
15-ஆக-202110:36:09 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ உணர்ச்சி வேற காழ்ப்புணர்ச்சி வேறையாக்கும். ரொம்ப உணர்ச்சிவச பட்டுட்டீங்க அண்ணா. அரசியல்வாதின்னா இப்படி தான் இருக்கோணும். ஆட்டைய போடுறப்ப தெம்பா போடணும் இப்படி குடைச்சல் வரும் போது டாஸமாக் அடிச்சு குப்புற படுத்துக்கோணும் கவலைப்படாதே பெரியண்ணா எல்லாம் கூட்டா முட்டு கொடுக்குறோம்னு சொல்லியிருக்கங்கல்லே. அங்கே பார் நான் அவனில்லை காட்பாடி கோடவுன் அண்ணாவை. அது மாதிரி தெம்பா உலாத்துப்பா மணி.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-ஆக-202109:27:32 IST Report Abuse
RajanRajan பாருடா எடுபிடி வேலை பார்த்தவன் என்னமா நாணயஸ்தன் மாதிரி இப்படி படம் காட்டுறான். ஒருவேளை இவன் தர்மவான் .. போல கனவு கண்டிருப்பானோ என்னவோ. திருட்டு கும்பல்கள்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-ஆக-202103:12:25 IST Report Abuse
meenakshisundaram அது சரி -திமுக லே இப்போ எந்த மந்திரி அல்லது சட்டசபை உறுப்பினர் 'யோக்கியர் 'என்று ஒரு லிஸ்ட் போட்டால் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X