சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனீக்கள் கொட்டி மூதாட்டி படுகாயம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
குன்னுார்: பழைய அருவங்காடு பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கமலா, 60. இவர் ஊட்டியில் தங்கை வீட்டிற்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய அருவங்காடு அருகே தேனீ கூண்டு கலைந்து, கமலாவின் முகத்தில் தேனீக்கள் கொட்டியதில் மயக்கமடைந்தார். தகவலின்பேரில், அங்கு வந்த ஆம்புலன்ஸ்



குன்னுார்: பழைய அருவங்காடு பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.
குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கமலா, 60. இவர் ஊட்டியில் தங்கை வீட்டிற்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழைய அருவங்காடு அருகே தேனீ கூண்டு கலைந்து, கமலாவின் முகத்தில் தேனீக்கள் கொட்டியதில் மயக்கமடைந்தார். தகவலின்பேரில், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் தேனீக்கள் கொட்டியது. ஆம்புலன்சை அங்கேயே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். ஆம்புலன்சிற்குள் தேனீக்கள் புகுந்தது.தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு தீயணைப்பு வாகனத்திலேயே குன்னூர் லாலி மருத்து மனையில் சேர்த்தனர்.. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சிகிச்சை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X