சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி அருகே கருங்குரங்கை கத்தியால் வெட்டிய நபரால் பரபரப்பு

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரையில் இன்று மதியம் வீட்டுக்கு முன்பு, கார்த்திக் என்ற இளைஞர் வீட்டு வாசலில் கருங்குரங்கை கத்தியால் வெட்டியதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் செல்ல அச்சம் அடைந்தனர். பின், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினரை கண்டதும் குரங்கை வெட்டிய நபர் அங்கேயே
ஊட்டி  அருகே   கருங்குரங்கை கத்தியால் வெட்டிய நபரால் பரபரப்பு


ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சனகொரையில் இன்று மதியம் வீட்டுக்கு முன்பு, கார்த்திக் என்ற இளைஞர் வீட்டு வாசலில் கருங்குரங்கை கத்தியால் வெட்டியதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் செல்ல அச்சம் அடைந்தனர். பின், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினரை கண்டதும் குரங்கை வெட்டிய நபர் அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றார். வனத்துறையினர் கருங்குரங்கை மீட்டு, அங்குள்ள வனப்பகுதியில் புதைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், மனநலம் பாதித்த இந்த இளைஞரால் ஊருக்குள் நாள்தோறும் பிரச்னை ஏற்படுவதாகவும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மனநலம் பாதித்த இவரை மீட்டு காப்பகத்தில் விட வேண்டும். என்றனர்

அழிந்து வரும் பட்டியலில் உள்ள நீலகிரி கருங்குரங்கை ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கருங்குரங்கு மனநல பாதித்த இளைஞர் வசம் எப்படி சிக்கியது என்பது குறித்து வனத்துறையினர் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். என, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
16-ஆக-202116:55:05 IST Report Abuse
mrsethuraman  மனிதன் குரங்காகி விட்டான்
Rate this:
Cancel
DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா
16-ஆக-202112:08:55 IST Report Abuse
DMK Venum Poda பிஜேபியிடம் இந்தியா சிக்கிய மாதிரி தான்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
16-ஆக-202110:37:40 IST Report Abuse
 N.Purushothaman மன நலம் பாதித்தவனால் அவ்வளவு ஆக்ரோஷமாக இந்த செயலை செய்ய முடியுமா ? இவன் ஒண்ணா கசாப்பு கடை வச்சி இருந்திருப்பான் இல்லாட்டி வீட்டுல மனைவி கூட சண்டை போட்டு இருப்பான் ....பின்னணியை தீர விசாரிக்க வேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X