பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாம் அனைவரும் முன்வரவேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரையாற்றி பேசினார்.நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாடினார்.அவர் பேசியது,இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும்
 தடுப்பூசி செலுத்தி, அனைவரும் முன்வரவேண்டும்: ஜனாதிபதி  வலியுறுத்தல்


புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரையாற்றி பேசினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாடினார்.
அவர் பேசியது,

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதால் இந்தாண்டு சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது.


latest tamil news
கோவிட்டிற்கு எதிரான போர் ஓயவில்லை. 2வது அலையை நாம் சமாளித்தாலும் இன்னும் விழப்புணர்வுடன் இருக்கவேண்டும். 50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடபட்டுள்ளது : நாட்டில் பரவிய கோவிட் இரண்டாம் அலைக்கு பலர் பலியானது வேதனை அளிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களின் அயாரத உழைப்பால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாம் அனைவரும் முன் வரவேண்டும். எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. புதிய பார்லிமென்ட் கட்டடம் உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்,நமது விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளினால் தேசத்திற்கு பெருமை சேர்த்தனர். 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போதைய ஒலிம்பிக்கில் , இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் பல்வேறு இன்னல்களை கடந்து விளையாட்டு துறையில், பெண்களின் பங்கேற்பு வெற்றியில் சகாப்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்கள் முதல் ராணுவம் வரையில் , மற்றும் ஆய்வகங்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை, பெண்கள் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள். மகளிரின் இந்த வெற்றியால், எதிர்காலத்தில் வளர்ந்த இந்தியாவின் ஒரு பார்வையை நான் காண்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு பெங்களுரு அரசாங்க மருத்துவமனையில் பதிவு செய்ய முயற்சித்தால் முடியவில்லை, தனியார் மருத்துமனையில் பணம் கட்டி ஊசி போட மருந்து தாராளமாக உள்ளது, என்ன கொடுமை சார் இது
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
15-ஆக-202112:23:47 IST Report Abuse
Appan ithu thaan pijepiyin aatci.. மக்கள் நாள் கணக்காக கியூவில் நின்று தடுப்பூசி கிடைக்காமல் செல்கிறார்கள்.இவர் என்னவோ மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று பேசுகிறார்..பிஜேபி மக்களிடம் இருந்து வெகு தூரம் போய் விட்டது..இவர்கள் ஆள தகுதி உள்ளவர்களா//?.
Rate this:
Cancel
Naser Ali -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-202110:31:28 IST Report Abuse
Naser Ali ஸ்டாக் இல்லை எசமான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X