வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ் கைது

Added : ஆக 14, 2021
Share
பேர்ணாம்பட்டு:பேர்ணாம்பட்டு அருகே, வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், பேர்ணம்பட்டு அடுத்த செர்லபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன், 45. இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அப்போது, 2004 ம் ஆண்டு சென்னை போலீஸ் டி.ஐ.ஜி., அலுவலக வங்கி கணக்கில் இருந்த ஆறு லட்சம் ரூபாயை

பேர்ணாம்பட்டு:பேர்ணாம்பட்டு அருகே, வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், பேர்ணம்பட்டு அடுத்த செர்லபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன், 45. இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அப்போது, 2004 ம் ஆண்டு சென்னை போலீஸ் டி.ஐ.ஜி., அலுவலக வங்கி கணக்கில் இருந்த ஆறு லட்சம் ரூபாயை கையாடல் செய்ததற்காக சசிதரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

2005 ம் ஆண்டு குடியாத்தம் அருகே இளம் பெண்ணை இரண்டு ஆண்டுகள் மிரட்டி வந்தது குறித்து பேர்ணாம்பட்டு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.2008 ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், பலமனேரில் ஆள் கடத்தல் வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் பேர்ணாம்பட்டு பகுதியில் சமூக விரோத செயங்களில் சசிதரன் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதனால் எஸ்.பி., செல்வகுமார் உத்தரவுபடி போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணிக்கு ஏரிக்கானாறு வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சசிதரன் விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் பெரிய பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணிநாதன், 56, என்பவரிடம் லைசன்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை வாங்கி வந்தது தெரியவந்தது. போலீசார் வருவதையறிந்த மணிநாதன் தப்பியோடினார். அவர் வீட்டில் சோதனை நடத்தி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X