சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழில் போட்டி ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டியவர் கைது

Added : ஆக 14, 2021
Share
Advertisement
அரக்கோணம்:தொழில் போட்டியால், அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர்கள் மணிகண்டன், 24, குபேந்திரன், 30. பொரி வியாபாரிகளான இருவரும் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு செல்லும் ரயில்களில் பொரி விற்று வந்தனர்.சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7:00 மணிக்கு
 தொழில் போட்டி ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டியவர் கைது

அரக்கோணம்:தொழில் போட்டியால், அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர்கள் மணிகண்டன், 24, குபேந்திரன், 30. பொரி வியாபாரிகளான இருவரும் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு செல்லும் ரயில்களில் பொரி விற்று வந்தனர்.சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொரி விற்றுக் கொண்டிருந்தனர்.

ரயில் இரவு 10:00 மணிக்கு அரக்கோணம் அருகே வந்த போது குபேந்திரனிடம் பொரி கேட்டவர்களுக்கு மணிகண்டன் கொடுத்து பணத்தை வாங்கியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குபேந்திரன் கத்தியால் மணிகண்டனை வெட்டினார். பயணிகள் தடுத்த போது, அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தி விட்டு தப்பியோடினார்.

அரக்கோணத்திற்கு ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அரக்கோணம் ஒன்றாவது பிளாட்பாரத்தில் பதுங்கியிருந்த குபேந்திரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X